துபாய் : 2021 டி-20 ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி நிறைவடைகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 16 அணிகளும் இது பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவுகள் மார்ச் 20, 2021 நிலவரப்படி அணிகளின் தர வரிசைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் நேரடியாக செல்லும் சூப்பர் 12 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இன்ஸ்டீஸ், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
மீதமுள்ள 4 இடங்களுக்கு தகுதிச் சுற்று நடைபெறும். இதில், ஏ பிரிவு தகுதி சுற்று அணிகளில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் உள்ளன.
'பி' பிரிவில் வங்கதேசம், ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் உள்ளன. இதில் ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணியும், பி பிரிவில் இரண்டாம் இடம் பெறும் அணியும் சூப்பர் குரூப்1இல் இடம்பெறும்.
சூப்பர் 12 குரூப்-2 பிரிவில் பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2ஆம் இடம் பிடிக்கும் அணியும் இடம்பெறும். உலக கோப்பை போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகின்றன.