தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

INDW vs SLW T20: இலங்கையை வீழ்த்திய இந்திய மகளிர் அணி - ஜெமிமா ரோட்ரிக்ஸ்

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

INDW vs SLW T20, ஜெமிமா ரோட்ரிக்ஸ், Jemimah Rodrigues
INDW vs SLW T20

By

Published : Jun 24, 2022, 9:50 AM IST

தம்புள்ளை (இலங்கை):இந்திய மகளிர் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், ஒருநாள் தொடரிலும் விளையாட இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரின் முதல் போட்டி இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நேற்று (ஜூன் 23) நடைபெற்றது.

டாஸ் வென்ற பேட்டிங் செய்த இந்திய அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்களை மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அந்த அணியில் கவிஷியா தில்ஹாரி மட்டும் 47 ரன்கள் எடுத்து போராடிய நிலையில் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி பந்துவீச்சில் ராதா யாதவ் 2, தீப்தி சர்மா, பூஜா வஸ்தரேகர், ஷஃபாலி வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

முதலில் விளையாடிய இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 36 ரன்களையும், ஷஃபாலி வர்மா 31 ரன்களையும் எடுத்தனர். இலங்கை பந்துவீச்சு தரப்பில் இனோகா ரணவீரா 3, ஓஷாதி ரணசிங்கே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடரின் இரண்டாவது டி20 போட்டி இதே தம்புள்ளை மைதானத்தில் நாளை (ஜூன் 25) நடைபெறுகிறது.

இதையும் படிங்க:ஐசிசி மகளிர் தரவரிசை - 8வது இடத்தை தக்க வைத்து கொண்ட மந்தனா! சறுக்கிய கோஸ்வாமி

ABOUT THE AUTHOR

...view details