தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 18, 2023, 1:57 PM IST

ETV Bharat / sports

இளைஞர்களின் மனம் கவர்ந்த ’Crush of Indian Cricket' ஸ்மிருதி மந்தனா பிறந்தநாள் இன்று!!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Etv Bharat
Etv Bharat

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஓப்பனரும், மிதாலி ராஜ், கோஸ்வாமிக்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனையாக வலம் வருபவர் ஸ்மிருதி மந்தனாவின் பிறந்தநாள் இன்று.

ஸ்மிருதி மந்தனா ஜூலை 18ஆம் தேதி 1996ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர். மந்தனாவின் தந்தையும் சகோதரரும் மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியவர்கள் என்பதால் மந்தனாவிற்கு கிரிக்கெட் ஆர்வம் எளிதில் தொற்றிக் கொண்டது. சிறு வயதில் அதிக நேரம் ’ஸ்டிரீட் கிரிக்கெட்’டில் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டினார்.

இடது கை தொடக்க பேட்டரான ஸ்மிருதி மந்தனா நாளடைவில் தனது திறமையை வளர்த்து கொண்டு 9 வயதில் மகாராஷ்டிரா அண்டர்- 15 அணிக்காகவும், 11 வயதில் மகாராஷ்டிரா அண்டர் - 19 அணிக்காகவும் விளையாடினார். உள்ளூர் போட்டிகளில் மந்தனாவின் வளர்ச்சியை கண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் 2013 பெண்களுக்கான அண்டர் - 19 அணியில் விளையாடும் வாய்ப்பை அளித்தது.

முதல் போட்டியில் ஸ்மிருதி பெரிதாக சோபிக்காத போதும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றது உள்ளூர் கிரிக்கெட் தான் என்று கூறலாம். உள்ளூர் போட்டியில் குஜராத் அணிக்கெதிராக மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய மந்தனா 150 பந்துகளில் அதிரடியாக விளையாடி 224 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனாவின் இந்த அதிரடி இன்னிங்ஸ் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியது.

பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் அவரது ஆட்டத்தை பார்த்து 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உள்ளூர் தொடரான பிக்பேஷ் லீக்கில் (WBBL) பிரிஸ்பேன் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். மேலும் இங்கிலாந்தில் கிரிக்கெட் சூப்பர் லீக்கில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். ஆனால் சில போட்டிகளில் விளையாடிய பின் காயம் காரணமாக விலகினார்.

2017ஆம் ஆண்டு காயத்திலிருந்து குணமடைந்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய மந்தனா மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 2017ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மந்தனா அடித்த சதம் இந்திய அணி ஃபைனல் செல்ல ஸ்மிருதி மந்தனாவின் பேட்டிங் முக்கிய காரணமாக இருந்தது.

2018ஆம் ஆண்டில் 12 ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 669 ரன்கள் எடுத்தார். டி20 போட்டிகளிலும் ஸ்மிருதி மந்தனா தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 2019ஆம் ஆண்டில் நியூஸிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சாதனை படைத்தார்.

இவரது சிறப்பான ஆட்டத்தை கௌரவிக்கும் வகையில் ஐசிசி சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான ’ரேச்சல் ஹெய்ஹோ பிளிண்ட்’ என்ற விருதை வழங்கியது. பெண்கள் ஐபிஎல் போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா அதிக விலைக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூ. 3.40 கோடிக்கு வாங்கப்பட்டார். மிதாலி ராஜ், கோஸ்வாமிக்கு பிறகு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஸ்மிருதி மந்தனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இதையும் படிங்க: Wimbledon: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி வரலாறு படைத்த அல்காரஸ்!

ABOUT THE AUTHOR

...view details