ஹைதரபாத்:நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் தோல்வியை தழுவாமல் அசத்திய இந்திய அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது. இதனை யாரும் எதிர்பார்க்காத நிலையில், கோடிக்கனக்கான இந்திய ரசிகர்களின் மணம் உடைந்தது.
இருப்பினும் இதனைத்தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் இருந்து வருவது மட்டுமல்லாமல் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த தொடக்க வீரரான கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினாலும், ஒரு ஃபினிஷராக ரிங்கு சிங் தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
இந்நிலையில் ரிங்கு சிங்கை இந்திய அணி ஒரு ஃபினிஷராக பார்க்கிறது என்றும், அந்த ரோலை அவரால் நன்றாக செய்து கொடுக்க என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் ஈடிவி பாரத்தின் பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "இந்திய அணி ரிங்கு சிங்கை ஒரு ஃபினிஷராக பார்கிறது. ஒரு சவாலான இலக்கை துரத்தும் போது அவர் அற்புதமாக செயல்படுகிறார். அவரை பிளேயிங் 11-க்குள் கொண்டு வருவதற்கு அணி நிர்வாகம் துணை நிற்கிறது.