தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனாவின் விக்கெட்டை எடுக்க நடராஜன் போட்ட தடுப்பூசி - இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் நடராஜன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இன்று (மே 27) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

Natarajan Vaccinated,  நடராஜன்
Natarajan Vaccinated

By

Published : May 27, 2021, 7:23 PM IST

Updated : May 27, 2021, 11:08 PM IST

நாடு முழுவதும் 'அனைவருக்கும் தடுப்பூசி' என்ற நோக்கில் 18 வயது அடைந்தோர் முதல் அனைத்து வயதினரும் தற்போது தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இருப்பினும், பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சற்று தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் மக்களுக்கு முன்னுதாரணமாக தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இன்று கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தை பதிவிட்டு,"இன்று காலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இந்த ஆபத்தான சூழலிலும் நம்முடைய உயிரைக் காக்கப் போராடிவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள நடராஜன், எப்போது யார்க்கர்கள் மூலம் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளைத் தெறிக்கவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை குத்தகைக்கு விடக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Last Updated : May 27, 2021, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details