மொஹாலி : இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜன. 11) பஞ்சாப்பின், மொஹாலியில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். ஏறத்தாழ 14 மாத இடைவெளிக்கு பின்னர் கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளதால் ஆட்டத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.
அதேநேரம், தனிப்பட்ட காரணங்களால் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியை விராட் கோலியில் விளையாட மாட்டார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார். பஞ்சாப்பில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழும்பி உள்ளது.
கடுமையான பனிப்பொழிவு, இந்திய பந்துவீச்சாளர்களின் அதிரடி ஆகியவற்றுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஜொலிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அதேபோல் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்றொரு இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்து உள்ளது.