தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND VS WI: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (ஜூலை 27) நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா
ind vs wi

By

Published : Jul 27, 2023, 2:53 PM IST

ஹைதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் கடந்த 25ம் தேதியன்று நிறைவு பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிரா ஆனது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 27) பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் வைத்து நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டி போலவே இதிலும் இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் வெற்றிப்புள்ளியை ரோஹித் - கில் தொடங்குவார்கள் எனத் தெரிகிறது. டி-20 போல் இல்லாமல், ஒருநாள் போட்டிகளில் சற்று தடுமாறும் சூர்யகுமார் யாதவுக்கு தற்போது இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை சரியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். காயம் காரணமாக களம் காணாத கே.எல். ராகுலின் இடத்தைப் பிடிக்க இஷான் கிஷன், சாம்சன் இடையே போட்டி உள்ளது. பெளலிங்கை பொருத்த வரை உம்ரான் மாலிக், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட், முகேஷ் குமார், ஷர்துல் தாக்கூர் உள்ளனர். சூழல் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் இருக்க, யுஸ்வேந்திர சாஹல் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

கணிக்கப்பட்ட அணி விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்னம் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன்(வி.கீ), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஷர்துல் தாக்கூர்.

வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப்(கேப்டன் மற்றும் வி.கீ), கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், கேசி கார்டி, அல்ஸாரி ஜோசப், ஓஷேன் தாமஸ், யானிக் கரியா, ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் கெவின் சின்க்ளேர்.

ஆட்ட நேரம்:இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.

நேரலை:டிடி ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா.

இதையும் படிங்க:Harmanpreet kaur: நடுவருடன் வாக்குவாதம்.. ஹர்மன்பிரீத் கவுருக்கு அபராதம்... ஐசிசி முடிவு?

ABOUT THE AUTHOR

...view details