டர்பன் :இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (டிச. 10) டர்பனில் நடைபெற இருந்தது.
டர்பனில் காலை முதலே நிலவிய மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து மழை கொட்டி வந்தது. ஆட்டம் துவங்குவதற்கு முன்னதாகவும் மழை கொட்டியதால் டாஸ் போடுவதில் தாம்தம் ஏற்பட்டது. தொடர்ந்து மைதானம் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டது. இருப்பினும் மழை விட்ட பாடில்லை.
ஏறத்தாழ 15 மில்லி மீட்டர் அளவுக்கு கொட்டியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டாஸ் கூட போடப்படாமல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டதால் ஆட்டத்தை காண வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகினர். இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 12ஆம் தேதி கெபெர்ஹா மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க :ஆப்கானிஸ்தான் தொடரில் ஹர்திக் பாண்ட்யா - ஜெய் ஷா சூசகம்!