தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.. தீபக் சாஹர், முகமது ஷமி திடீர் விலகல் - காரணம் என்ன? - deepak chahar

Squad change in South Africa tour: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பந்து வீச்சாளர்களான தீபக் சாஹர் தென் ஆப்ரிக்கா எதிரேயான ஒரு நாள் போட்டிகளில் இருந்தும், முகமது ஷமி டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அணியில் இருந்து விலகிய தீபக் சாஹர் மற்றும் முகமது ஷமி
அணியில் இருந்து விலகிய தீபக் சாஹர் மற்றும் முகமது ஷமி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 1:52 PM IST

ஜோகன்னஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா): தென் ஆப்ரிக்கா-இந்தியா இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரின் அடுத்து வரும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தீபக் சாஹர், தனது குடும்ப ரீதியான மருத்துவ அவசர நிலை காரணமாக அணியில் இருந்து விலகுவதாகவும், அதேபோல் முகமது ஷமி டெஸ்ட் போடிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், தீபக் சாஹருக்கு பதிலாக ஆகாஷ் தீப் விளையாடுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், முகமது ஷமியின் உடல் நிலையைக் காரணம் காட்டி, அடுத்து வரக்கூடிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை (டிச.17) நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் இருந்து விலகி, இரண்டு மற்றும் மூன்றாம் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும், டெஸ்ட் அணியில் இணைந்து பயிற்சி மேற்கொள்வார் என்றும், மேலும் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதனிடையே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் ஆகியோர் டெஸ்ட் அணியுடன் இணைந்து, போட்டிகளுக்கான தயாரிப்புகளை மேற்பார்வை இடுவார்கள்.

முன்னதாக, இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்று டி20 போட்டிகளில், மோசமான வானிலை காரணமாக முதல் போட்டி கைவிடப்பட்டதை அடுத்து, 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமன் செய்யப்பட்டது. இந்நிலையில், நாளை (டிச.17) இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் துவங்க உள்ளது.

தற்போது மாற்றம் செய்யப்பட்ட இந்திய அணி: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சங்சு சாம்சன், அக்ஸர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷதீப் சிங், ஆகாஷ் தீப்.

இதையும் படிங்க:இனி யாரும் தோனி ஜெர்சி நம்பரை பயன்படுத்த முடியாது.. கவுரவித்த பிசிசிஐ.. !

ABOUT THE AUTHOR

...view details