தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிட்னியில் தரையிறங்கிய இந்திய அணி! - விராட் கோலி

சிட்னி: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்காக ஐக்கிய அரபு அமீரத்திலிருந்து புறப்பட்ட இந்திய அணி, இன்று மாலை சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

team-india-arrives-in-sydney-for-australia-tour
team-india-arrives-in-sydney-for-australia-tour

By

Published : Nov 12, 2020, 6:43 PM IST

Updated : Nov 12, 2020, 6:56 PM IST

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணி ஒருநாள் தொடர், டி20 தொடர், டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கவுள்ளது. இதற்காக ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் இந்திய அணி நேற்று மாலை ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டது.

இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும்வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பிசிசிஐ நிர்வாகம் செய்திருந்தது.

கேஎல் ராகுல்

வீரர்களுக்கான பிபிஇ உடை, முகக்கவசங்கள், கையுறைகள் என அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு புறப்பட்டனர். இந்நிலையில் இன்று மாலை இந்திய வீரர்கள் சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர். இவர்களோடு ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் சென்றுள்ளனர்.

ஸ்டீவ் ஸ்மித்

இந்த வீரர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இந்திய அணியின் சிட்னியில் தரையிறங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க:பயோ பபுள் சூழல் அவ்வளவு எளிதானதல்ல - சுனில் ஷேத்ரி

Last Updated : Nov 12, 2020, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details