தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... உடற்தகுதி சோதனையில் பாஸ் செய்த 'ஹிட் மேன்' - இந்தியா ஆஸ்திரேலியா தொடர்

இன்று நடத்தப்பட்ட உடற்தகுதி பரிசோதனையில் ரோகித் ஷர்மா தேர்ச்சி அடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Rohit Sharma
Rohit Sharma

By

Published : Dec 11, 2020, 4:02 PM IST

ஜபிஎல் தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 போட்டிகளில் ரோகித் ஷர்மா இடம்பெறவில்லை. உடற்தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரோகித் ஷர்மாவிற்கு இன்று நடத்தப்பட்ட சோதனையில் அவர் தேறியுள்ளார். இதனையடுத்து அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், ஆஸ்திரேலியா செல்லும் ரோகித் ஷர்மா கரோனா விதிமுறை காரணமாக அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்பதால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை. 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்துதான் ரோகித் ஷர்மா பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட் மேன் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரோகித் இந்திய அணிக்கு திரும்ப உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘தாராள மனசு பாண்டியா’: நடராஜனிடம் தொடர் நாயகன் விருதை வழங்கிய ஹர்திக்!

ABOUT THE AUTHOR

...view details