இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பல்வேறு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் 5 இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில் இளம் வீரர் புகோவ்ஸ் என்பவரின் ஆட்டத்தைப் பார்த்து முன்னாள் வீரர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். ஆஸி.யின் இளம் ரிக்கி பாண்டிங் என கூறுகின்றனர்.
இதைப்பற்றி அவர் பேசுகையில், '' இது நிச்சயம் மிகப்பெரிய பயணமாக இருக்கப் போகிறது. ஆனால் இந்தப் பயணத்தின் சவாலை ஏற்க இதைவிட சிறந்த இடமும், தருணமும் அமையாது என நினைக்கிறேன்.
இந்தத் தொடரில் ஆடுவதற்காக மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பயணம் இருக்கும். என்னுடையது கொஞ்சம் வித்தியாசமானது. இரண்டு சீசன்களுக்கு முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் மனரீதியான பிரச்னை காரணமாக வெளியேற்றப்பட்டேன்.