ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முழு கவனமும் டெஸ்ட் தொடரில் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கேப்டன் கோலியால் பதிவிடப்பட்ட ட்விட்டர் வீடியோவில், டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சிகளை எப்போதும் நேசிக்கிறேன் என மேற்கோள் காட்டிருந்தார். அதேபோல் கேஎல் ராகுலும் பிங்க் பந்தில் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
இதேபோல் ஷமியும், இளம் வீரர் சிராஜும் டெஸ்ட் போட்டிகளுக்காக பிங்க் நிற பந்துகள், சிகப்பு நிற பந்துகளில் பயிற்சி எடுத்த வீடியோவும் வைரலாகி வருகிறது.