தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் தொடரில் ஓகே... ஆஸ்திரேலிய தொடரில் சாதிப்பாரா பும்ரா? - ஐபிஎல் 2020

ஐபிஎல் தொடரில் காயத்திற்கு பின்னர் பும்ரா தன்னுடைய பழைய ஃபார்மிற்கு வந்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் எப்படி செயல்படுவார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

bumrah-dazzles-in-ipl-but-concern-in-odis-remain
bumrah-dazzles-in-ipl-but-concern-in-odis-remain

By

Published : Nov 11, 2020, 9:05 PM IST

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் பும்ரா. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாகப் பந்து வீசிய பின், பும்ராவுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இந்தக் காயத்திலிருந்து மீண்டுவந்து நியூசிலாந்து தொடரில் ஆடியபோது, பும்ராவின் தாக்கம் இல்லை. இதனால் பும்ரா மீண்டும் ஃபார்மிற்கு வருவதற்கு பல நாள்கள் ஆகும் என விமர்சகர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் ஐபிஎல் தொடர் மூலம் பும்ரா பதிலளித்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ராவின் பந்துவீச்சு, மும்பை அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக பார்க்கப்பட்டது. இதைப்பற்றி முன்னாள் இந்திய வீரர் மதன் லால் கூறுகையில், '' ஐபிஎல் தொடரில் ரபாடா அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், பும்ராவின் பந்துவீச்சுதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

20 ஓவர்கள் போட்டிகளில் பும்ரா ஃபார்மிற்கு வந்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 50 ஓவர்கள் போட்டிகளில் பும்ராவின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

20 ஓவர் போட்டிகளில் பும்ராவை அடிக்க நினைத்த நேரத்தில் எல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அப்படி இல்லை என்பதாலே ஆஸி. தொடர் ஆவலை தூண்டியுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பாக். அணியில் ஆமிர், மாலிக் நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details