தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாக்ஸிங் டே டெஸ்ட்: கிரீஸ் கோட்டை கடக்காமல் இருந்தும் பெயினுக்கு ரன் அவுட் தராதது ஆச்சரியமே - ஷேன் வார்னே - ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட்

பாக்ஸிங் டே டெஸ்டில் இன்றையை ஆட்டத்தில், டிம் பெய்ன் ரன் அவுட் மூன்றாவது நடுவரைப் பொறுத்தவரை அவுட் இல்லை என முடிவு செய்யப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை அது அவுட்தான் என்று ஷேன் வார்னே உறுதியாக தெரிவித்துள்ளார்.

shane warne
ஷேன் வார்னே

By

Published : Dec 26, 2020, 11:27 PM IST

மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் மூன்றாவது அம்பயரில் தயவால், ஆஸ்திரேலியா கேப்டன் ரன் அவுட்-இல் இருந்தது தப்பித்தது ஆச்சர்யம் அளித்திருப்பதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான ஷேன் வார்னே கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஷேன் வார்னே தனது ட்விட்டரில், ரன் அவுட் ரிவியூவிலிருந்து ஆஸி. கேப்டன் டிம் பெயின் தப்பித்தது ஆச்சரியம் அளித்தது. ஏனென்றால் கிரீஸ் கோட்டை கடந்த அவரது பேட் எள் அளவும் இல்லாதபோதிலும் மூன்றாவது நடுவர் தயவால் தப்பித்துள்ளார். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது அவுட்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

55ஆவது ஓவரை அஸ்வின் வீசியபோது பேட்டிங் பிடித்த கேமரான் க்ரீன் கவர் திசையில் அடித்த சிங்கிள் எடுத்த முற்பட்டபோது மறுமுனையில் இருந்த பெய்ன் பேட்டிங் திசையை நோக்கி ஓடியபோது இந்த ரவுட் அப்பீல் கேட்கப்பட்டது. பெய்ன் அப்போது 6 ரன்கள் எடுத்திருந்தார்.

டிம் பெய்ன் தப்பித்த ரன் அவுட்

இதைத் தொடர்ந்து, அவர் பெரிதாக சோபிக்காமல் 13 ரன்களில் அஸ்வினின் சுழலில் வீழ்ந்தார். இருப்பினும் நடுவரின் இந்த முடிவு ஆச்சர்யத்தை வரவழைத்திருப்பதாக ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாட் அவுட் முடிவு கொடுத்தபோது மூன்றாவது நடுவர் (டிவி நடுவர்) பால் வில்சன், "பெய்ன் பேட் கிரீஸுக்கு வெளியே இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்கான ஆதரங்களை காண முடியவில்லை. இதன் மூலம் அவரது பேட் சிறிய அளவில் கிரீஸை கடந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. இதன் மூலம் அவர் நாட் அவுட் என முடிவு செய்கிறேன்" என்று தனது முடிவின்போது தெரிவித்தார்.

இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்தி வீசிய இந்திய பவுலர்களை பாராட்டியுள்ள ஷேன் வார்னே, நாளை முழுவதும் களத்தில் பேட்டிங் செய்து ஜொலிப்பார்களா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய நாள் மிரட்டலாக அமைந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு சிறப்பான பிட்சை அமைத்த மைதான பணியாளர்களுக்கு வாழ்த்துகள். இதேபோன்று பிட்ச்களை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்திய பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்ததுடன், அஜிங்கியா ரஹானே சிறப்பாக கேப்டன்ஷிப் செய்தார். நாளை முழுவதும் பேட்டிங்கில் இந்திய வீரர்கள் தாக்கு பிடிப்பார்களா? என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாக்ஸிங் டே போட்டிகளைத் தவறவிடும் ரோட்ரிக்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details