தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாரம்பரியத்திலிருந்து விலகும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

ஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியைச் சேர்ந்த 9 வீரர்கள் இடம்பெற்றுள்ளதால், பாரம்பரியத்திலிருந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா விலகுவதாக கூறப்பட்டுள்ளது.

aus-vs-ind-cricket-australia-picks-test-stars-for-warm-up-game
aus-vs-ind-cricket-australia-picks-test-stars-for-warm-up-game

By

Published : Nov 13, 2020, 6:44 PM IST

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில், டெஸ்ட் அணியில் உள்ள ஒன்பது வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வழக்கமாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அணிகளுக்கு இளைய அணியையும், வலுவிழந்த அணிகளையுமே பயிற்சி போட்டிகளில் ஆடுவதற்கு ஆஸி. தேர்வு செய்யும். 2018-19 தொடரில் ஆடிய பயிற்சி ஆட்டங்களில் 10 முதல்தர போட்டிகளில் கூட பங்கேற்றிடாத பல ஆஸ்திரேலிய இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2014-15ஆம் ஆண்டு தொடரில், டெஸ்ட் அணியில் இடம்பெற்ற ஒருவர் கூட பயிற்சி ஆட்டத்தில் ஆடவில்லை.

ஆனால் இம்முறை சூழல் வேறாக உள்ளது. கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக பல நாள்களாக கிரிக்கெட்டை விளையாடாமல் இருப்பதால், பயிற்சி ஆட்டங்களில் ஆடுவதற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஆஸி. கேப்டன் டிம் பெய்ன், கேமரூன் க்ரீன், ஷேன் அப்பாட், ட்ராவிஸ் ஹெட், மைக்கேல் நசர், ஜேம்ஸ் பட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, மிட்சல் ஸ்வெப்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது பாரம்பரியத்திலிருந்து விலகி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:264 ரன்கள்' ஒரு அணியின் ஸ்கோர் அல்ல; ஒரு வீரரின் ஸ்கோர்: ஹிட்மேன் உருவான நாள் இன்று!

ABOUT THE AUTHOR

...view details