வெலிங்டன்:இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2ஆவது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று (நவம்பர் 22) மெக்லீன் பார்க் மைதானத்தில் 3ஆவது டி20 போட்டி தொடங்கியது.
டி20 போட்டி: இந்தியா அணிக்கு 161 ரன்கள் இலக்கு
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 161 ரன்களை எடுத்துள்ளது.
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிங்கிய நியூசிலாந்து வீரர்கள் 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக டெவோன் கான்வே 49 பந்துகளுக்கு 59 ரன்களை எடுத்தார். அதேபோல க்ளென் பிலிப்ஸ் 33 பந்துகளுக்கு 54 ரன்களையும், மார்க் சாப்மேன் 12 பந்துகளுக்கு 12 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஹர்ஷல் படேல் 1 விக்கெட்டை எடுத்தார். அந்த வகையில் 161 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:உலக கோப்பை கால்பந்து: செனகலை வீழ்த்தியது நெதர்லாந்து