தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியா VS ஜிம்பாப்வே தொடர்... 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி... - ஜிம்பாப்வேவில் இந்திய கிரிக்கெட் அணி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

India beat Zimbabwe by 10 wickets in 1st ODI
India beat Zimbabwe by 10 wickets in 1st ODI

By

Published : Aug 18, 2022, 7:32 PM IST

Updated : Aug 18, 2022, 7:54 PM IST

ஹராரே: ஜிம்பாப்வேவில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (ஆக 18) நடந்தது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த வகையில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

அதிகபட்சமாக ரெஜிஸ் சகாப்வா 51 பந்துகளுக்கு 35 ரன்களை எடுத்தார். அதேபோல பிராட் எவன்ஸ் 29 பந்துகளுக்கு 33 ரன்களையும், ரிச்சர்ட் 42 பந்துகளுக்கு 32 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து 190 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர். தொடக்க ஆட்டகாரர்களான ஷிகர் தவான், சுப்மன் கில் இருவரும் விக்கெட் இழக்கவில்லை. 30.5 ஓவர்கள் முடிவில் 192 ரன்களை குவித்து முதலாவது வெற்றியை உறுதி செய்தனர். அதிகபட்சமாக சுப்மன் கில் 72 பந்துகளுக்கு 82 ரன்களை எடுத்தார். ஷிகர் தவான் 113 பந்துகளுக்கு 81 ரன்களை எடுத்தார். அதன்படி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

இதையும் படிங்க:மான்செஸ்டர் யுனைடட் கால்பந்து அணியை விலைக்கு வாங்க கோடீஸ்வரர் ராட்கிளிஃப் ஆர்வம்

Last Updated : Aug 18, 2022, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details