தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND VS SA 3rd T20: தென்னாப்பிரிக்காவை திணறடித்தது இந்தியா; தொடரில் முதல் வெற்றி! - யுஸ்வேந்திர சஹால்

3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை, தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

IND VS SA 3rd T20
IND VS SA 3rd T20

By

Published : Jun 14, 2022, 10:34 PM IST

விசாகப்பட்டினம்: 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுவதற்காக இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பயிற்சியின்போது காயம் காரணமாக கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் இருவரும் தொடரிலிருந்து விலகினர். இதனால், கேப்டனாக ரிஷப் பந்தும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டனர்.

டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், கட்டக்கில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணியை தோற்கடித்தது. இதனால், 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், 3ஆவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி ஏசிஏ - விடிசிஏ மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. ஓப்பனர்கள் ருதுராஜ், இஷான் கிஷான் ஜோடி 97 ரன்களை எடுத்து சிறப்பான அடித்தளத்தை அமைத்த நிலையில், அடுத்து வந்த மிடில் வரிசை பேட்டர்கள் பெரிய ஸ்கோரை கட்டியெழுப்ப தவறிவிட்டனர்.

ஹர்திக் பாண்டியா மட்டும் இறுதிநேரத்தில் அதிரடி காட்டினார். அதிகபட்சமாக ருதுராஜ் 57 (35) , இஷான் 54 (35), ஹர்திக் 31 (21) ரன்களை எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் பிரிட்டோரியஸ் 2, ரபாடா, ஷம்ஸி, கேசவ் மகராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

180 ரன்கள் என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க ஓப்பனிங் பேட்டர்கள் டெம்பா பவுமா, ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் தற்போது களமிறங்கியுள்ளனர். கடந்த போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை அளித்த இந்த ஜோடி இம்முறை சோபிக்க தவறியது. கேப்டன் பவுமா 8 ரன்களுக்கு வெளியேறிய நிலையில், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 23 (20), ரஸ்ஸி வான் டர் டஸ்ஸன் 1 (4) ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினர்.

மிடில் வரிசை பேட்டர்களான கிளேசன், பிரிட்டோரியல், மில்லர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பார்னல் மட்டும் இறுதிநேரத்தில் சற்று அதிரடி காட்ட, மற்ற வீரர்கள் பெவிலியனை நோக்கி அணி வகுப்பு நடத்தினர். இதனால், தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவரிலேயே 131 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

எனவே, இந்திய அணி 48 ரன்களில் வித்தியாசத்தில் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், சஹால் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details