தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND vs SA: இறுதிவரை போராடிய இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி - ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் 2022

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

IND vs SA 3rd ODI 2022 Highlights
IND vs SA 3rd ODI 2022 Highlights

By

Published : Jan 24, 2022, 6:44 AM IST

Updated : Jan 24, 2022, 9:12 AM IST

கேப்டவுன்:தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதலாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இதையடுத்த இரண்டாவது போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. அதன்படி 2-0 கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனிடையே மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று கேப்டவுனில்நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வெற்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 288 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.2 ஓவர்கள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 283 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக விராட் கோலி 84 பந்துகளில் 65 ரன்களையும், தவான் 61 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இரண்டாவது ஒருநாள் போட்டி... தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Last Updated : Jan 24, 2022, 9:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details