தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Ind Vs Aus: ராகுல், ஜடேஜா அபார பேட்டிங்கில் இந்தியா வெற்றி! - Ind Vs Aus 1st odi

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 17, 2023, 10:03 PM IST

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலியா உடனான பார்டர் கவாஸ்கர் டிராஃபி டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கினை தேர்வு செய்தது. ரோகித் சர்மா தனது மைத்துநரின் திருமணம் காரணமாக இன்றைய போட்டியில் பங்கேற்காததால் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்றார். இன்றைய போட்டியை பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மைதானத்தில் கண்டுகளித்தார்.

ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். ஷமி ஆட்டத்தின் முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய நிலையில் இரண்டாவது ஓவரை வீசிய சிராஜின் அனல் பறக்கும் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் போல்டானார். அதன் பின் களமிறங்கிய ஸ்டிவ் ஸ்மித் பாண்டியா பந்துவீச்சில் 22 ரன்களுக்கு ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களுக்கு ஜடேஜா சுழலில் சிராஜ்ஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதனைத்தொடர்ந்து லம்புஷானே குல்தீப் சுழலில் கல்லி திசையில் ஜடேஜாவின் அபாரமான கேட்சில் அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய ஜாஷ் இங்க்லிஸ், கிரீன் சற்று நேரம் நிலைத்து நின்று ஆடிய நிலையில் ஷமி பந்தில் அடுத்தடுத்து போல்டானார்கள். 174 ரன்களுக்கு 6 விக்கெட் என தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை மெக்ஸ்வெல், ஸ்டொய்னிஸ் ஜோடி சரிவிலிருந்து மீட்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் இருவரும் சொற்ப ரன்களில் (8,5)அடுத்தடுத்து அவுட்டாகினர். பின்னர் வந்த டெயிலெண்டர்கள் விரைவில் நடையைக்கட்ட ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஷமி, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 145 கி.மீ., வேகத்தில் அனல் பறக்க பந்து வீசினார். 2வது ஓவரை வீசிய ஸ்டொய்னிஸ் இஷான் கிஷனை அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

4வது ஓவரை வீசிய ஸ்டார்க் கோலி, சூர்யகுமார் ஆகியோரை அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். சற்று நேரம் தாக்குபிடித்த ஷுப்மன் கில் 20 ரன்களுக்கு அவுட்டாக இந்திய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

பின்னர் களமிறங்கிய ராகுல், பாண்டியா இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் நோக்கில் விளையாடியது. பாண்டியா 25 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டொய்னிஸ் வீசிய பவுன்சரில் அவுட்டானார். இந்திய அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்த நிலையில் ஜடேஜா ஆட்டத்தின் சூழலுக்கேற்ப பொறுமையாக ரன்கள் சேர்த்தார். ஒரு பக்கம் அபாரமாக விளையாடிய ராகுல் அரைசதம் கடந்தார். இந்திய அணி 39.5 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 75 ரன்களுடனும், ஜடேஜா 45 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

இதையும் படிங்க: சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி முன்னாள் மேயர் மகன்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details