சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உலக கோப்பை தொடரின் 11ஆவது லீக் ஆட்டமான நியூஸிலாந்து-வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன. இதில் மூன்றாவது வெற்றியை நோக்கி நியூஸிலாந்து பயணிக்க ஆயுத்தமாகிறது. அதே நேரத்தில் உலக கோப்பையில் இதுவரை 5 முறை இந்த இரு அணிகள் சந்தித்ததில் ஒரு முறை கூட வங்கதேசம் அணி வென்றது இல்லை. இதனால், வங்கதேசம் அணியும் அந்த அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்புடன் உள்ளது.
ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட்-2023 தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரானது, நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரை, இந்திய இம்முறை நடத்துகிறது. இந்த போட்டி இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய 10 நகரில் நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்து அணி வங்கதேசம் அணியை நாளை சென்னை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது. கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பவுண்டரிகள் வித்தியாசத்தில் கோப்பை வெல்லும் வாய்ப்பை நியூஸிலாந்து அணி இழந்தது.
இந்த அணியானது, 1975ஆம் ஆண்டில் இருந்து, 2019 வரை, 96 ஆட்டங்கள் ஆடியுள்ளது. இதில் 54 ஆட்டங்கள் வெற்றியும், 39 ஆட்டங்களும், தோல்வியும், 1 டை, 2 ஆட்டங்கள் எவ்வித முடிவும் இல்லை. இவர்கள் வெற்றியின் சராசரி 62% சதவீதமாக உள்ளது. நடப்பு உலக கோப்பையில், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் ஆடிய இரண்டு ஆட்டங்களையும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அபரா வெற்றியை அடைந்துள்ளது. மேலும் 2015, மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 2ஆம் முறை இறுதி போட்டி வரை சென்று இராண்டாம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம் அணியானது, 1999 ஆம் ஆண்டு தான் முதல் உலகக் கோப்பை போட்டியானது ஆடியது. அந்த ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, ஒரே ஒரு முறை மட்டுமே கால் இறுதிச்சுற்று வரை தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து, உலகக் கோப்பையில் மொத்தம் 42 ஆட்டங்களில், 14 வெற்றியும், 25 தோல்வியும் சந்தித்துள்ளது. அதேபோல் 3 ஆட்டங்கள் எவ்வித முடிவுமின்று இருந்துள்ளது.
சென்னையில் முதல் முறையாக இரு அணிகளும்: வங்கதேசம் - நியூஸிலாந்து அணி இதுவரை நடைபெற்ற உலக்கோப்பையில் 5-போட்டிகளை நேருக்கு நேர் இரு அணிகளும் மோதியுள்ளது. இதில், வங்கதேசம் அணியாது நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒரு ஆட்டம் கூட வென்றது இல்லை. மேலும், சென்னை மைதானத்தில் முதன் முறையாக இரு அணிகளும், சந்திக்கின்றன. சென்னையில் இந்த இரு அணிகளும், பல முறை தனி தனியாக வெவ்வேறு அனிகளுடன் மோதினாலும், சென்னையில் நேருக்கு நேர் மோதுவது இதுதான் முதல் முறை ஆகும்.
சென்னை மைதானத்தின் ஆடுகளம்: சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று அனைத்து தரப்பினரின் கருத்தாகும். மேலும், இந்த ஆடுகளம் பிளாக் சாயில் எனப்படும் கருப்பு மண்ணால், உறுவாக்கபட்ட ஆடுகளம்.