லக்னோ:13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 ஆணிகள் விளையாடி வருகின்றன.
இதில் உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று (அக்.12) நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் இன்னிங்சை விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா ஆகியோர் தொடங்கினர். நிதானமாக விளையாடிய இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி ரன்களை சேகரித்தனர். அதேநேரம் ஆஸ்திரேலிய அணி வீரர்களும் கட்டுக்கோப்பாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தனர்.
விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் தொடக்க வீரர் தெம்பா பவுமா 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல் பந்துவீச்சில், டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென் ஆப்பிரிக்க அணி, 19 புள்ளி 4 ஓவர்களுக்கு 108 ரன்களை எடுத்து இருந்தது. குயின்டன் டி காக் - தெம்பா பவுமா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்டனர்ஷிப்பை எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வான் டெர் டுசென் தன் பங்குக்கு 26 ரன்கள் மட்டும் அடித்து கொடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே அபாரமாக விளையாடிய டி காக் சதம் விளாசினார். சதம் அடித்த கையோடு டி காக் (109 ரன்) மேக்ஸ்வெல் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து வந்த ஐடன் மார்க்ராம் 56, ஹென்ரிச் கிளாசென் 29, டேவிட் மில்லர் 17, மார்கோ ஜான்சன் 26 ரன்கள் என சிரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 3
இதனைத் தொடர்ந்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டேவிட் வார்னர் 13, மிட்செல் மார்ஸ் 7, ஸ்மித் 19, ஜோஷ் இங்கிலிஸ் 5, மேக்ஸ்வெல் 3, ஸ்டோனிஸ் 5 என்ற ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
சிறுது நேரம் மிட்செல் ஸ்டார்க் மற்றும் லபுசேன் மட்டும் களத்தில் நின்று அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஸ்டார்க் 27 ரன்களில் வெளியேற, அதனைத் தொடர்ந்து லபுசேனும் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4.5 ஓவர்கள் முடிவில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகாராஜ், ஷம்சி மற்றும் மார்கோ ஜான்சன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க :South Africa Vs Australia : முதல் வெற்றியை பெறும் முனைப்பில் ஆஸ்திரேலியா! தென் ஆப்பிரிக்கா தாக்குபிடிக்குமா?