தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

NED vs AFG : அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா ஆப்கானிஸ்தான் ? நெதர்லாந்துடன் இன்று மோதல்! - netherlands vs afghanistan

World Cup Cricket 2023 : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

NED vs AFG
NED vs AFG

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 11:25 AM IST

Updated : Nov 3, 2023, 1:39 PM IST

லக்னோ :ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (நவ. 3) லக்னோவில் நடைபெறும் 34வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் இன்று (நவ. 3) மதியம் 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்க உள்ளது. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 வெற்றி 3 தோல்வி என 6 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, முன்னாள் சாம்பியானான பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி உள்ள ஆப்கானிஸ்தான் அணி, தாங்கள் எந்த விதத்திலும் பலம் குறைந்த அணி அல்ல என்பதை உலக அரங்கில் நிரூபித்துள்ளது.

அந்த அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி, அஸ்மதுல்லா ஓமர்ஷாய், ரஹ்மத் ஷா, ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ஆப்கான் நட்சத்திர வீரர் ரஷித் கான் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை என்றால் கூட முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகின்றனர்.

உலகக் கோப்பை 2023ல் உச்சக் கட்ட பார்மில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திய ஒரே அணியாக உள்ள நெதர்லாந்து அணி கடைசியாக வங்கதேச அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சீசனை விட்டு வெளியேற்றியது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள நெதர்லாந்து அணி 4 தோல்வி 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது.

ஏகனா மைதானம்:லக்னோவில் உள்ள ஏகனா மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு மிக சவலான ஆடுகளமாக இருந்து வருகிறது. இங்கு வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் நன்கு ஒத்துழைப்பு கொடுக்கும். மேலும் இரு அணிகளும் சிறந்த ஸ்பின்னர்களை வைத்துள்ளதால் இன்று போட்டியில் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் :

நெதர்லாந்து அணி:எட்வர்ட்ஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பாரேசி, கொலின் அக்கர்மன், பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ஷாரிஸ் அஹ்மத், ஆர்யன் தத், பால் வான் மீகெரென், சாகிப் சுல்ஃபிக் க்மான்டாருரு, சாகிப் ஜூல்பி க்மான்டாருரு , ரோலோஃப் வான் டெர் மெர்வே.

ஆப்கானிஸ்தான் அணி:ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக், ஃபசல்ஹாக், ஃபார்ஸ்ஹாக் அப்துல் ரஹ்மான், நஜிபுல்லா சத்ரான்.

இதையும் படிங்க:தேசிய போல் வால்ட் போட்டியில் மயிலாடுதுறை வீராங்கனை தங்கம் வென்று சாதனை!

Last Updated : Nov 3, 2023, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details