துபாய்: ஐசிசி நடத்தும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று (டிச.11) வெளியிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றவுள்ள இத்தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
லீக் சுற்று, ப்ளே ஆஃப் போட்டிகள், சுப்பர் 6 போட்டிகள், அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதி போட்டி என மொத்தம் 41 போட்டிகள் நடைபெற உள்ளது. இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக ஜனவரி 20ஆம் தேதி வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி தென் ஆப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோன்டைன் நகரின் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முன்னதாக கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டிற்காக ஐசிசி இலங்கை அணியை இடைநீக்கம் செய்தது. இதனைத் தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை தொடரை இலங்கையிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றம் செய்தது. இதையடுத்து தற்போது ஐசிசி புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு பின்னர் இந்திய அணி, ஜனவரி 25ஆம் தேதி அயர்லாந்து அணியையும், ஜனவரி 28ஆம் தேதி கடைசி லீக் ஆட்டமாக அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.
இந்திய அட்டவணை
ஜனவரி 20: இந்தியா vs வங்கதேசம்.
ஜனவரி 25: இந்தியா vs அயர்லாந்து.