செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டி கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
இன்று (டிச.26) தொடங்கிய முதல் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். ஆனால் தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்தது.
ரோகித் சர்மா 5 ரன், ஜெய்ஸ்வால் 17, சுப்மன் கில் 2 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறிது நேரம் நீடித்து விளையாடியது. 68 ரன்கள் சேர்ந்த இந்த ஜோடியை ககிசோ ரபாடா பிரித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் போல்டாகி 31 ரன்களுடன் வெளியேறினார். அதைதொடர்ந்து விராட் கோலி 38, அஷ்வின் 8, ஷர்துல் தாக்கூர் 24, பும்ரா 1 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.