தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயில்..! - WestIndies

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெயில்

By

Published : Feb 7, 2019, 11:45 PM IST

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள், மற்றும் மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதலில் நடந்த இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், கிரிக்கெட்டின் சிக்ஸர் மன்னனுமான கிறிஸ் கெயில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

இதன் மூலம் ஆறு மாதத்திற்கு பிறகு இவர் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாடவுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசியாக விளையாடிய இவர், 6 பவுண்ட்ரி, 5 சிக்சர் உட்பட 73 ரன்களை விளாசியுள்ளார்.

39 வயதான இவர், தற்போது மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாடவுள்ளதை அவரது ரசிகர்கள் இணையளத்தில் வைரலாக்கி வருகின்றனர். பிப்ரவரி 20 ஆம் தேதி, இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்பேடோஸில் நடைபெறவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details