தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'என் இனிய உடன்பிறப்புகளே நலமா'? இம்ரான் தாஹிர் ட்வீட் - தோனி

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரேயொரு நாள் இருக்கும் நிலையில், சென்னை ரசிகர்களை குதூகலப்படுத்தும் விதமாக, அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் பதிவிட்டுள்ள ட்வீட் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

இம்ரான் தாஹிர்

By

Published : Mar 21, 2019, 11:27 AM IST

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாள்தான் உள்ளது. மார்ச் 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சிஎஸ்கே அணியின் வீரரும், தென்னாப்பிரிக்கா அணியின் சுழற்பந்துவீச்சாளருமான இம்ரான் தாஹிர் ட்வீட் செய்துள்ளார்.

அதில், என் இனிய உடன்பிறப்புகளே நலமா? உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் வரும் உங்கள் சகோதரன். அடிச்சி தூக்கலாமா. எடுடா வண்டிய போடுடா விசில என்று தமிழ் கலந்த ஆங்கிலத்தில் ட்வீட் செய்ததுடன், வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவரது ட்வீட் இணைய தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இம்ரான் தாஹிர் இதுபோன்று ட்வீட் செய்து ஒன்றும் புதிதல்ல. அவர் கடந்த சீசனிலேயே இதுபோன்ற ஏராளமான ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details