அகமதாபாத்: உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஐசிசி உலக கோப்பை இன்று (அக்.05) தொடங்கியது. இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பினான இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதனைத் தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்டது நியூசிலாந்து அணி தொடக்க வீரரான வில் யங் டங் அவுட் ஆனார். அதன் பின் களம் புகுந்தார் ரச்சின் ரவீந்திரா. இவர் கான்வேவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினார்.
பின்னர் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசினர். 82 பந்துகளில் சதம் விளாசிய ரச்சின், இதன் மூலம் நியூசிலாந்து அணிக்காக உலக கோப்பை போட்டியில் வேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதே போல் உலக கோப்பை தொடரில் அறிமுக அட்டத்தில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார்.