மெல்போர்ன்: இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்தார்.
ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விராத் கோலி! - விராத் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் செயலை ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கூறியுள்ளார்.
Shane Warne Virat Kohli Joe Root Spirit of Cricket ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விராத் கோலி ஜோ ரூட்
இந்தப் போட்டியில் அஸ்வின் ஓவரில் சிக்ஸர் அடித்தபோது ஜோ ரூட் தசை பிடிப்பால் அவதியுற்றார். அப்போது அவருக்கு விராத் கோலி உதவி புரிந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ட்விட்டரில், “இதை நேசியுங்கள்... விராத் கோலிக்கு பாராட்டுகள்... ஜோ ரூட்டுக்கும்தான்.. அற்புதமான மற்றொரு இன்னிங்ஸ்... #SpiritOfCricket எனப் பதிவிட்டுள்ளார்.