இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குச் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றதன் மூலம் முதல்முறையாக நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.