கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்.24) நடந்தது. இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 55 பந்துகளுக்கு 68 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார். அதேபோல லாரா வோல்வார்ட் 44 பந்துகளுக்கு 53 ரன்களையும், மரிசான் காப் 13 பந்துகளுக்கு 27 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அந்த வகையில், 165 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரரான டேனி வியாட் 30 பந்து பந்துகளுக்கு 34 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சோபியா டன்க்லி 16 பந்துகளுக்கு 28 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 3ஆவதாக களமிறங்கிய ஆலிஸ் கேப்ஸி ரன்களின்றி ஆட்டமிழந்தார்.