சென்னை: ’சின்னக் கலைவாணர்’ என மக்களால் கொண்டாடப்படும் நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஏப்.16) அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
’வீ மிஸ் யூ’ - மறைந்த நடிகர் விவேக்குக்கு நடராஜன் இரங்கல் - நடிகர் விவேக் மரணம்
நடிகர் விவேக்கின் மரணத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
CRICKETER NATARAJAN Condolence for Vivek
இந்நிலையில் நடிகர் விவேக் இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களின் வாயிலாக விவேக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் தமிழ்நாட்டு வீரருமான நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், " உங்கள் ஆன்மா அமைதி பெறட்டும். உங்களை இழந்து வாடுகிறோம்" என்று மறைந்த நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.