12ஆவது உலகக்கோப்பை தொடர் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கவிருக்கும் வீரர்களின் பட்டியலை கிரிக்கெட் நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், உலகக்கோப்பையில் பங்கேற்கவிருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு! - Miller
12ஆவது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் தென்னாப்பிரிக்கா அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அந்த அணிக்கு டூ ப்ளஸிச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த ஹசீம் ஆம்லா தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது. அதேபோல் இவருடன் தொடக்க வீரராக களமிறங்க மார்கரம், டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நடுவரிசை பேட்ஸ்மேன்களாக வான் டர் டூசன், டேவிட் மில்லர், டுமினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பந்துவீச்சாளர்களில் டேல் ஸ்டெயின், லுங்கி இங்கிடி, ரபாடா, இம்ரான் தாஹிர், ஷம்ஷி, ஆன்ரிச் நோர்ட்டியோ, பிரிடோரியஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக எதிர்பார்க்கப்பட்ட ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
தென்னாப்பிரிக்க அணி விவரம் : டூ ப்ள்ஸிஸ் (கேப்டன்), டுமினி, டேல் ஸ்டெயின், டேவிட் மில்லர், பெலுக்வயோ, இம்ரான் தாஹிர், டி காக், மார்க்ரம், லுங்கி இங்கிடி, ஹஷீம் ஆம்லா, ஷஜ்ஸி, ரபாடா, வான் டர் டூஸன், ஆன்ரிச் நோர்ட்யே, பிரிடோயஸ்