உலகக் கோப்பை ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், எந்த எந்த வீரர்கள் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக, நான்காவது வரிசையில் எந்த வீரர் விளையாட வேண்டும், தோனிக்கு மாற்று விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் யார், ஹர்திக் பாண்டியா விஜய் சங்கர் இவர்களில் எந்த ஆல்ரவுண்டர் அணியில் தேர்வாக வேண்டும் போன்ற கேள்விகளுக்கு நாளைதான் பதில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விக்கெட்கீப்பராக செயல்பட வேண்டும் என ரசிகர்கள் கருத்து இந்நிலையில், இது குறித்து ஐசிசி தனது அதிகார்வபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளது. அதில், முக்கியமாக தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், கே.எல்.ராகுல் மற்றும் அம்பதி ராயுடு இவர்களில் யார் அணியில் தேர்ந்தேடுக்கப்பட வேண்டும் என்று கேள்வி கேட்டது. இதற்கு ரசிகர்கள் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் தலா 45 சதிவிகித வாக்குகள் பெற்றுள்ளனர். இதனால், இருவருக்கும் சம வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
நான்காவது வரிசையில் தோனிதான் களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் இதேபோல் நான்காவது வரிசையில், தோனிதான் விளையாட வேண்டும் என ரசிகர்கள் 36 சதவிகித வாக்குகளை தெரிவித்துள்ளனர். கே.எல்.ராகுலுக்கு 20 சதவிகிதமும், விஜய் சங்கருக்கு 16 சதவிகிதமும், அம்பதி ராயுடுவிற்கு 15 சதவிகிதமும் மற்றும் ரிஷப் பந்திற்கு 13 சதவிகதமும் வாக்குகள் தந்துள்ளனர்.
இஷாந்த் ஷர்மா நான்காவது பந்துவீச்சாளராக அணியில் தேர்வாக வேண்டும் மேலும், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா இவர்களுடன் நான்காவது பந்துவீச்சாளராக யார் களமிறங்குவார் என்ற கேள்விக்கு, ரசிகர்கள் அதிகபட்சமாக இஷாந்த் ஷர்மாவிற்கு 36 சதவிகித வாக்குகளை தந்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், கலீல் அகமதுக்கு ரசிகர்கள் 23 சதவிகித வாக்குகளை தந்துள்ளனர்.
ஒட்டுமொத்தத்தில் ரசிகர்கள் அதிக வாக்குகள் தந்து தேர்வு செய்த வீரர்கள் அணியில் இடம்பிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.