உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக இடம்பெற ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தேர்வு குறித்து உத்தப்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'தகுதி மற்றும் ஆட்டத்திறன் ஆகிய அடிப்படையின் கீழ் ஒருவர் இந்திய அணியில் தேர்வாக வேண்டும் என்றால், அந்த தகுதி தினேஷ் கார்த்திக்கிற்குதான் உள்ளது.