இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான அலெக்ஸ் ஹெல்ஸ் இதுவரை 70 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 6 சதம், 14 அரைசதம் உட்பட 2419 ரன்கள் எடுத்துள்ளார்.
உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹெல்ஸ் நீக்கம்! - அலெக்ஸ் ஹெல்ஸ்
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
வலதுகை பேட்ஸ்மேனான இவர், சமீபகாலமாக சிறப்பான ஃபார்மில் இருந்தார். உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நெருங்கும் நிலையில், தடைசெய்யப்பட்ட ஊக்க மருத்தை பயன்படுத்திய விவகாரத்தில் அவர் சிக்கினார். இதனால், அவருக்கு 21 நாட்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், தற்போது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.