தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ராயுடு, பந்த், நவ்தீ சைனி மாற்று வீரர்களாக அறிவிப்பு! - நவ்தீ சைனி

டெல்லி : உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கான மாற்று வீரர்களாக அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த் மற்றும் ஐபிஎல் புகழ் நவ்தீப் சைனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராயுடு, பந்த், நவ்தீ சைனி மாற்று வீரர்களாக அறிவிப்பு!

By

Published : Apr 17, 2019, 8:26 PM IST

12ஆவது உலகக்கோப்பை தொடர் மே 30ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் விஜய் சங்கர் அணியில் தேர்வு செய்யப்பட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், ராயுடு மற்றும் பந்த் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில், 16 பேர் கொண்ட அணியை அனுமதிக்குமாறு ஐசிசியிடம் கேட்டிருந்தோம். ஆனால் 15 பேர் கொண்ட அணியையே ஐசிசி அனுமதித்தது.

இதனால் தேர்வாகாதவர்கள் மனம் நோக வேண்டாம். உலகக்கோப்பை மிக நீண்ட தொடர் என்பதால் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்கள் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறினார்.

தற்போது உலகக்கோப்பைத் தொடரின்போது வீரர்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் அவர்களுக்கான மாற்று வீரர்களாக ரிஷப் பந்த், ராயுடு மற்றும் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளாதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதனால் உலகக்கோப்பை தொடரின்போது மாற்று வீரர்கள் தேவைப்பட்டால் உடனடியாக பறப்பதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்கு முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போதும் இது போன்று மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details