19.4 ஓவர்கள் முடிவில், இலங்கை அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
IND VS SL Live Score: இலங்கை அணி ஆல் அவுட்.. 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி! - உலக கோப்பை லைவ்
Published : Nov 2, 2023, 2:51 PM IST
|Updated : Nov 2, 2023, 8:43 PM IST
20:42 November 02
IND VS SL Live Score: இலங்கை அணி அல் அவுட்!
20:22 November 02
IND VS SL Live Score: பரிதாப நிலையில் இலங்கை!
இலங்கை அணி 17 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 43 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
20:05 November 02
IND VS SL Live Score: மேலும் ஒரு விக்கெட்!
களத்தில் சிறிது நேரம் நிலைத்து 12 ரன்கள் எடுத்த ஏஞ்சலோ மேத்யூஸ், ஷமி பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
19:54 November 02
IND VS SL Live Score: துஷ்மந்த சமீர அவுட்!
ஏற்கனவே இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்த நிலையில், தற்போது 7வது விக்கெட்டையும் இழந்துள்ளது. துஷ்மந்த சமீர எவ்வித ரன்களும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
19:36 November 02
IND VS SL Live Score: அடுத்தடுத்த விக்கெட்டை வீழ்த்திய ஷமி!
10 ஓவரை வீசய ஷமி, அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சரித் அசலங்கா 1 ரன்னுடனும், துஷான் ஹேமந்த தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
19:29 November 02
IND VS SL Live Score: 9 ஓவர்கள் முடிவில் இலங்கை!
இலங்கை அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.
19:18 November 02
IND VS SL Live Score: 6 ஓவர்கள் முடிவில்!
இலங்கை அணி 6 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் சரித் அசலங்கா களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
19:01 November 02
IND VS SL Live Score: குசல் மெண்டீஸ் அவுட்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது 3வது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.
18:54 November 02
IND VS SL Live Score: சிராஜுக்கு 2வது விக்கெட்!
2வது ஓவரை வீசய சிராஜ் தனது இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். சதீர சமரவிக்ரம எவ்வித ரன்களும் எடுக்காமல் பெவிலியன் திரும்பி உள்ளார்.
18:52 November 02
IND VS SL Live Score: அடுத்த விக்கெட்!
முதல் ஓவரின் முதல் பந்திலேயே நிசங்கா அட்டமிழந்த நிலையில், இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் திமுத் கருணாரத்ன சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகியுள்ளார்.
18:50 November 02
IND VS SL Live Score: முதல் விக்கெட்!
முதல் ஓவரின் முதல் பந்திலேயே இலங்கை அணி விக்கெட்டை இழந்துள்ளது. தொடக்க வீரரான பாத்தும் நிசங்க டக் அவுட் ஆனார்.
18:48 November 02
IND VS SL Live Score: களமிறங்கியது இலங்கை அணி!
இலங்கை அணி 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளனர். தொடக்க வீரர்களாக பாத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன விளையாடி வருகின்றனர்.
18:08 November 02
IND VS SL Live Score: இலங்கை அணிக்கு 358 ரன்கள் இலக்கு!
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது.
17:50 November 02
IND VS SL Live Score: 6வது விக்கெட்!
இந்திய அணி தனது 6வது விக்கெட்டை இழந்துள்ளது. அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களில் ஆட்டமிழந்தார்.
17:40 November 02
IND VS SL Live Score: 46 ஓவர்கள் முடிவில் இந்தியா!
இந்திய அணி 46 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 62 ரன்களுடனும், ஜடேஜா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
17:20 November 02
IND VS SL Live Score: மதுஷங்கவுக்கு 4வது விக்கெட்!
போட்டியின் 42 ஓவரை வீசிய மதுஷங்க, சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இப்போட்டியில் 4வது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
17:11 November 02
IND VS SL Live Score: 40 ஓவர்கள் முடிவில்!
40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது.
17:07 November 02
IND VS SL Live Score: ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்!
கே.எல்.ராகுல் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், துஷ்மந்த சமீர பந்து வீச்சில் துஷான் ஹேமந்தவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
16:51 November 02
IND VS SL Live Score: 36 ஓவர்கள் முடிவில்!
இந்திய அணி 36 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்கள் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் விளையாடி வருகின்றனர்.
16:31 November 02
IND VS SL Live Score: அடுத்த விக்கெட்!
சிறப்பாக விளையாடி 88 ரன்கள் குவித்த விராட் கோலி, தில்ஷான் மதுஷங்க பந்து வீச்சில் நிசங்காவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
16:22 November 02
IND VS SL Live Score: 30 ஓவர்கள் முடிவில்!
போட்டியின் 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்துள்ளது.
16:15 November 02
IND VS SL Live Score: கில் அவுட்!
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
16:00 November 02
IND VS SL Live Score: 150 ரன்களை கடந்த பார்ட்னர்ஷிப்!
இந்திய அணி 155 ரன்கள் எடுத்துள்ள நிலையில், கோலி - கில் பார்ட்னர்ஷிப் 150 ரன்களை கடந்துள்ளது.
15:57 November 02
IND VS SL Live Score: 25 ஓவர்கள் முடிந்தது!
25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்துள்ளது.
15:37 November 02
IND VS SL Live Score: 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி!
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்களுடனும், கில் 53 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
15:33 November 02
Ind vs Sl Live Score: சுப்மன் கில் அரைசதம்!
தொடக்க வீரரான சுப்மன் கில் 55 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்.
15:25 November 02
Ind vs Sl Live Score: விராட் கோலி அரைசதம்!
தொடக்க வீரரான ரோகித் சர்மா ஆட்டமிழத்த பின் களம் வந்த விராட் கோலி 50 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்.
15:13 November 02
Ind vs Sl Live Score: வலுவடையும் பார்ட்னர்ஷிப்!
போட்டியின் 2வது பந்திலேயே ரோகித் சர்மா அவுட் ஆனாலும், அதன்பின் நிதானமாக விராட் கோலி - சுப்மன் கில் விளையாடி வருகின்றனர். இவர்களது பார்ட்னர்ஷிப் 81 ரன்களை தற்போது எட்டியுள்ளது.
15:01 November 02
Ind vs Sl Live Score: 12 ஓவர்கள் முடிவில்!
போட்டியின் 12 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
14:45 November 02
Ind vs Sl Live Score: 8 ஓவர்கள் முடிவில் இந்தியா!
இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 26 ரன்னும், சுப்மன் கில் 15 ரன்னும் எடுத்து களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
14:31 November 02
IND VS SL Live Score: டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு!
மும்பை: ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 33 வது லீக் ஆட்டம் தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய - இலங்கை அணிகள் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். இந்த தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா முதல் ஓவரின் 2 வது பந்திலேயே போல்ட் ஆனார் . அவர் 4 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனைத் தொடர்ந்து சுப்மன் கில் - விராட் கோலி இணை விளையாடி வருகின்றது. இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11
இந்தியா: ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விகீ), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
இலங்கை: பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ்(கேப்டன் & விகீ), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மத்தியூஸ், துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க.