தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND VS SA: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்! - ஈடன் கார்டன்ஸ்

Cricket World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 37வது லீக் அட்டத்தில் நாளை (நவ.05) இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

india vs south africa
ஐசிசி உலகக் கோப்பை இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 10:40 PM IST

கொல்கத்தா:ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 37வது லீக் ஆட்டம் நாளை (நவ.5) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், மற்ற போட்டிகளில் நல்ல ரன்களை சேர்த்து அணிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் கடந்த போட்டியில் 92 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் அவர் ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். மற்ற பேட்டர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் அணியின் இக்கட்டான சூழ்நிலையில், சிறப்பாக செயல்பட்டு அணியை தூக்கி நிறுத்துகின்றனர். பந்து வீச்சில் முகமது சிராஜ், பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் சிறப்பான நிலையிலேயே உள்ளனர்.

ஹர்திக் பாண்டியா இடத்தில் இனி கே.எல்.ராகுல்:மேலும், காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் கலந்து கொள்ளாத ஹர்திக் பாண்டியா, முழுமையாக குணமடையாததால், அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அதனால், விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுலை துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறுபுறம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி. இவர்கள் விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளனர். பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க வீரரான டி காக் அசத்தலான பார்மில் உள்ளார்.

அவர் இந்த தொடரில் மட்டும் இதுவரை 4 சதங்களை விளாசியுள்ளார். மற்றொரு தொடக்க வீரரான டெம்பா பவுமா இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. மற்ற வீரர்களான டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம், வென் டர் டுசென் ஆகியோர் அணிக்கு பக்க பலமாக உள்ளனர்.

அதேபோல், பந்து வீச்சில் மார்கோ ஜான்சன் 16 விக்கெட்களும், ஜெரால்ட் கோட்ஸி 14 விக்கெட்களும், ரபாடா 11 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இந்த அணி இதுவரை வெற்றி பெற்றதில் பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்துள்ளனர். இவர்கள் சேஸ் செய்கையில் சற்று தடுமாற்றத்தை கண்டுள்ளனர். அதை இவர்கள் சரி செய்தால், நாளைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மோதும் அணிகள்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா.

இடம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா.

நேரம்: பிற்பகல் 2 மணி.

கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான வீரர்கள் பட்டியல்

இந்தியா: சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விகீ), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

தென் ஆப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விகீ), ரஸ்ஸி வான் டெர் டுசென், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி.

இதையும் படிங்க:PAK vs NZ: கைகொடுத்த வருண பகவான்..! 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்..!

ABOUT THE AUTHOR

...view details