2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து, வேல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து அணிகளும் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு உலகக்கோப்பை தொடரின் போதும் வெளியான ப்ரோமோக்கள் ரசிகர்களிடையே இன்று வரையிலும் பிரபலமான ஒன்றாக உள்ளது. முக்கியமாக இருஅணிகளிடையே மோதும் போட்டியின்போது வெளியான 'மொவ்கா மொவ்கா' ப்ரோமோ கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
உலகக்கோப்பை திருவிழா: வெளியாகியது முதல் ப்ரோமோ! - Worldcup Promo
2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் தொடரின் முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா தேனீர் கோப்பையை எடுக்க செல்கையில், அதனை ஆஸ்திரேலியர் எடுத்துச் சென்றுவிடுவர். பின்னர், “எங்களுக்கு கோப்பை இல்லையா?” எனக் கேட்கும்போது, “இதுவரை நீங்கள் கோப்பையை வெல்லவில்லையே” என ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் கூறுவதைபோல் அமைந்துள்ளன.
இந்த ப்ரோமோ, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இதுவரை உலகக்கோப்பையை வெல்லவில்லை என்பதை வெளிப்படுத்தி அமைந்துள்ளது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வைரலாகி வருகிறது.