2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் மே 30ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர் விஜய் சங்கர் பயிற்சியின்போது காயம் அடைந்துள்ளார். நேற்றைய பேட்டிங் பயிற்சியில் கலீல் அஹமது பந்தை எதிர்கொண்ட விஜய் சங்கருக்கு, முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் விஜய் சங்கர் பயிற்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
விஜய் சங்கர் காயம்: மாற்று வீரர் அனுப்பப்படுவாரா? - vijay shankar injured
உலகக்கோப்பை தொடருக்கு தேர்வான தமிழக வீரர் விஜய் சங்கர் பயிற்சியின்போது காயம் ஏற்பட்டுள்ளதால், மாற்று வீரர் அனுப்பப்படுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
காயம் குறித்து பிசிசிஐ சார்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், இன்று நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் களமிறங்கவில்லை. காயத்தின் தன்மை குறித்து அறிய விஜய் சங்கருக்கு ஸ்கேன் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காயத்தின் தன்மை பெரிதாக இருந்தால் அணிக்கு உடனடியாக மாற்று வீரர் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஒன்பது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள விஜய் சங்கர், உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகியுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது.