தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு... - west indies

செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் தேர்வு...

By

Published : Jul 1, 2019, 3:01 PM IST

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ரிவர்சைடு மைதானத்தில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெமர் ரோச்க்கு பதிலாக கேப்ரியல் களமிறங்குகிறார். அதேபோல இலங்கையில் லக்மல், திசாரா பெராரா, ஜீவன் மெண்டிஸ்க்குப் பதிலாக லஹிரு திரிமன்னே, கசுன் ராஜிதா, ஜெஃப்ரி வாண்டர்சே களமிறங்குகின்றனர்.

இலங்கை அணியில் கருணாரத்ன (கேப்டன்), குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு திரிமன்னே, தனஞ்சய டி சில்வா, உதனா, ஜெஃப்ரி வாண்டர்சே, கசுன் ராஜிதா, லசித் மலிங்கா ஆகியோர் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்த வரை கிறிஸ் கெய்ல், சுனில் ஆம்ப்ரிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், ஷானன் கேப்ரியல், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ் ஆகியோர் களத்தில் உள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details