இங்கிலாந்தில் 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 11ஆவது லீக் போட்டி இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று பிரிஸ்டோல் நகரில் நடைபெறவிருந்தது.
மழையால் தள்ளிப்போன பாகிஸ்தான் - இலங்கை ஆட்டம் - பாகிஸ்தான் அணி
பிரிஸ்டோல்: மழையின் காரணமாக பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரு லீக் போட்டிகளை சந்தித்த இவ்விரு அணிகளும், தலா ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளது.
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை ஏழு முறை நேருக்கு நேர் போட்டியிட்டதில், பாகிஸ்தான் அணியே ஏழு முறையும் வென்றுள்ளது. எனவே இன்றைய போட்டியிலாவது இலங்கை அணி, பாகிஸ்தானுடனான தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது மீண்டும் பாகிஸ்தானிடம் தோற்குமா? என்பது ஆட்டம் நடைபெற்றால் மட்டுமே தெரியும்.