உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அஸ்கர் ஆப்கன், ஜார்டன் தலா 42 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. நிதானமாக ஆடிய பாபர் ஆசாம் 51 பந்துகளில் 45 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
திக் திக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி - உலகக்கோப்பை
லீட்ஸ்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
திக் திக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி
விக்கெட்டுகளை இழந்தாலும் அடிக்க வேண்டிய இலக்கு குறைவு என்பதால் எளதில் வெற்றிப்பெறும் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இறுதிக் கட்டத்தில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக பந்து வீசியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் அதிரடி காட்டிய இமாத் வாசிமும் வாஹாப் ரியாசும் பாகிஸ்தான் வெற்றியை உறுதிசெய்தனர். இறுதி ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.