தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக்கோப்பை கிரிக்கெட்: பாக். நேர்த்தியான ஆட்டம் - உலக்கோப்பை

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் ஆரம்பம் முதலே நேர்த்தியாக ஆடிவருகிறது.

Pak

By

Published : Jun 23, 2019, 5:31 PM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெறும் 30ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தென் அப்ரிக்கா அணியை எதிர்த்து விளையாடிவருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சார்ஃப்ராஸ் அகமது டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

கடந்த போட்டியில் விளையாடிய சோயப் மாலிக், ஹசன் அலிக்கு பதிலாக ஹாரிஸ் சொஹைல், சஹீன் அப்ரிடி ஆகியோரை பாகிஸ்தான் அணி இப்போட்டியில் களமிறங்கியுள்ளது. தென் ஆப்ரிக்க அணி எந்தவித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா அணி நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.

மழையால் ஒரு போட்டி ரத்தாகியுள்ள நிலையில், கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணியுடன் மட்டும் ஒரேயொரு ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா, தனது மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் முழு முனைப்புடன் இப்போட்டியில் களமிறங்கியுள்ளது.

அதேபோல் பாகிஸ்தான் அணியும் தான் விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் தோல்வியைத் தழுவியது. ஒரு போட்டி மழையால் ரத்தாகியுள்ள நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி கண்டது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை எப்படியாவது பெற வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் இப்போட்டியில் களமிறங்கியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான இமாம் உல் ஹக்கும், பகர் சமானும் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். தொடக்கப் பந்துவீச்சாளர்களான ரபாடா, லுங்கி இங்கிடி ஆகியோரை சிறப்பாக எதிர்கொண்ட இருவரும் முதல் பத்து ஓவர்களில் விக்கெட்டுகள் எதுவும் பறிகொடுக்காமல் நேர்த்தியுடன் விளையாடினர்.

ஆட்டத்தின் போக்கு தென் ஆப்பிரிக்கா அணியின் கையிலிருந்து நழுவிக் கொண்டிருந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தினர். ஆட்டத்தின் 14ஆவது ஓவரின் நான்காவது பந்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் பகர் சமான் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இம்ரான் தாஹிர் வீசிய பந்தில் ஹாசிம் அம்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தாஹிர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

திருப்புமுனையை ஏற்படுத்திய தாஹிர்

25 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது. பாபர் அசாம் 26 ரன்களுடனும், முகமது ஹபீஸ் 17 ரன்களுடனும் நிதானமாக விளையாடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details