தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து மேலும் இரு வீரர்கள் விலகல் - AUS

லண்டன்: ஆஸ்திரேலியா அணியின் உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தசைபிடிப்பு காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து மேலும் இரு வீரர்கள் விலகல்

By

Published : Jul 8, 2019, 1:44 PM IST

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெறுங்கி வரும் நிலையில், அரையிறுதிக்கு தகுதியடந்துள்ள ஆஸ்திரேலியா அணியின் முதல் வரிசை வீரர் உஸ்மான் கவாஜா, ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தசைபிடிப்பு காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

உஸ்மான் கவாஜா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தசைபிடிப்பு காரணமாக உலகக்கோப்பையிலிருந்து விலகியுள்ளனர்

இதுகுறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் கூறுகையில்” முதல் வரிசை வீரரான உஸ்மான் கவாஜா, ஆல் ரவுண்டர் மர்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தென் ஆப்ரிக்கவுக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்தனர்.
இருவருக்கும் ஏற்பட்ட தசைபிடிப்பின் காரணமாக இந்த உலகக்கோப்பை தொடரில் அவர்கள் நீடிப்பது கேள்விக்குறியாகிள்ளது.

அவர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மேத்திவ் வேட் மற்றும் ஆல்ரவுண்டர் மிச்சல் மார்ஷ் அணியில் சேர்க்க உள்ளதாக கூறினார்.


ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ள உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், இவர்கள் விலகியுள்ளது ஆஸ்திரேலியா அணிக்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தும்.

கடந்த வாரம் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்ட காரர் ஷ்வான் மார்ஷ் எலும்பு முறிவு காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details