கிரிக்கெட் திருவிழாவான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக முடிந்துள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பவுண்டரிகள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் வெற்றிபெற்று, உலகக்கோப்பையை முதல்முறையாக வென்றுள்ளது. இந்த தொடரில், பல வீரர்கள் சிறப்பாக விளையாடி உலகிற்கு தங்களது திறமையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர்.
இந்த தொடரில் கெத்துக் காட்டிய 11 வீரர்கள் கொண்ட கனவு அணியை ஐசிசி தனது அதிகார்வபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில், கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் ரோகித் ஷர்மா, பும்ரா என இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
'ரன் மிஷின்' என்றழைக்கப்படும் கோலி இந்த லிஸ்டில் இடம்பெறவில்லை. அதேபோல், இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்த ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மிரட்டலாக பந்து வீசிய நியூசிலாந்தின் ஃபெர்க்குசன், ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் ஆகியோரை ஐசிசி தேர்வு செய்துள்ளது.