2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
350ஆவது போட்டியில் களமிறங்கிய "தல" தோனி! - Thala Dhoni
மான்செஸ்டர்: உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் 'தல' தோனி, 350ஆவது ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Dhoni
இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி களமிறங்கியதன் மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக 'கிரிக்கெட்டின் கடவுள்' எனப் புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.
Last Updated : Jul 9, 2019, 4:07 PM IST