தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தவான் இல்லாதது இந்தியாவுக்கு பேரிழப்பு - டெய்லர் - world cup2019

தவான் இல்லாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட பேரிழப்பு என நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

dhawan

By

Published : Jun 13, 2019, 9:03 AM IST

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், நாட்டிங்ஹாமில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளும் இந்தத் தொடரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதால் நாளையை போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனிடையே காயம் காரணமாக இந்திய வீரர் ஷிகர் தவான் நாளைய போட்டியில் இல்லாததால் அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.

இந்நிலையில், இது குறித்து நியூசிலாந்து நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர் கூறுகையில், "ஷிகர் தவான் இல்லாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட பேரிழப்பு. தற்போது உள்ள இந்திய அணி ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக விளையாடிவருகிறது. குறிப்பாக, ஷிகர் தவான் ஐசிசி தொடர்களில் நல்ல சாதனையை படைத்துள்ளார்.

இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோருக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. வலது, இடது கை கலவையோடு இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்துள்ளனர். இந்தத் தொடரில் நாங்கள் மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் அடுத்து வரும் போட்டிகள் பெரும்பாலும் எங்களுக்கு சவால் நிறைந்தப் போட்டிகள்தான்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details